• Home |
  • பயர்கிளே & லேட்டரைட்

பயர்கிளே & லேட்டரைட்

பயர்கிளே & லேட்டரைட்

பயர்கிளே

பயர்கிளே என்பது களிமண் நிறைந்த வண்டல் பாறை ஆகும், இதில் அதிக சதவீத அலுமினியம் ஆக்சைடு உள்ளது,  இது உயர் வெப்பநிலையின் விளைவுகளை தடுக்கின்றது. செங்கற்கள்(bricks), கற்கள்(stones), ரிடோர்ட்ஸ் (retorts), குரூசிபிள்ஸ் (crucibles), மோர்டார்ஸ் (mortars), மாஸ்ஸஸ் (masses), மட்பாண்டங்கள், தரைஓடுகள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.  தரத்தில் குறைந்த பயர்கிளேயானது குழாய்கள் மற்றும் குளியல் தொட்டிகள் போன்ற கனரக சானிட்டரி வேர்களை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

லேட்டரைட்

இரும்பு மற்றும் அலுமினியத்தின் ஆக்சைடுகள் மற்றும் சிறிய அளவில் மற்ற பொருட்களைக் கொண்ட லேட்டரைட் ஒரு எஞ்சிய மண்ணாகும், இது பொதுவாக சிவப்பு நிறமாகவும், பல்வேறு வகையான பாறைகளின் மேற்பரப்பிலும் கிடைக்கின்றது. லேட்டரைட்டின் பெருஜினஸ் வகைகள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப் படுகின்றன. இரசாயனத்தொழில், விவசாயம், கட்டுமானத் தொகுதிகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் களிமண் நிறைந்த லேட்டரைட் பயன்படுத்தப்படுகிறது.

டாமினின் பயர்கிளே & லேட்டரைட் சுரங்கம் கடலூர் மாவட்டம் தாழம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது.

A-AA+
Skip to content